சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் மா. சுப்பிரமணியன் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக திடீர் ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையின் தேவைகள், பயன்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்தார்.
மருத்துவமனைக்குச் சரியான நேரத்திற்குப் பணிக்கு வராத மருத்துவக் கண்காணிப்பாளர், மருத்துவ நிலைய அலுவலர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கும்படி மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டார். இதனால் மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களிடம் பரபரப்பு நிலவிவருகிறது.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் மதிப்புடைய 1.06 கிலோ தங்கம் பறிமுதல்