சென்னை: தமிழ்நாட்டில் Omicron பாதிப்புகள் குறித்தும், பரவல் குறித்தும் ஆய்வு செய்வதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள மத்திய அரசின் மருத்துவக் குழு வல்லுநர்கள் வனிதா, புர்பசா, சந்தோஷ் குமார், தினேஷ் பாபு ஆகியோருடன் சென்னை பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "தமிழ்நாடு அரசு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்தியக் குழுவினருடன் எடுத்துக் கூறப்பட்டது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை இயக்கினால் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் எனவும், அதனை இயக்குவது குறித்து மத்திய அரசிடம் குழுவினர் தெரிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்.
-
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஒன்றிய அரசு குழுவினருடன் சந்தித்து தமிழகத்தில் ஒமிக்ரான் நிலை, தடுப்பூசி மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்த ஆலோசனை நடைபெற்றது #Masubramanian #TNHealthminister #Omicron #ஒமிக்ரான் pic.twitter.com/l3V2qAjyPL
— Subramanian.Ma (@Subramanian_ma) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஒன்றிய அரசு குழுவினருடன் சந்தித்து தமிழகத்தில் ஒமிக்ரான் நிலை, தடுப்பூசி மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்த ஆலோசனை நடைபெற்றது #Masubramanian #TNHealthminister #Omicron #ஒமிக்ரான் pic.twitter.com/l3V2qAjyPL
— Subramanian.Ma (@Subramanian_ma) December 27, 2021மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஒன்றிய அரசு குழுவினருடன் சந்தித்து தமிழகத்தில் ஒமிக்ரான் நிலை, தடுப்பூசி மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்த ஆலோசனை நடைபெற்றது #Masubramanian #TNHealthminister #Omicron #ஒமிக்ரான் pic.twitter.com/l3V2qAjyPL
— Subramanian.Ma (@Subramanian_ma) December 27, 2021
தமிழ்நாட்டில் 97 பேருக்கு எஸ். ஜீன் டிராப் என ஒமைக்ரான் அறிகுறி வந்துள்ள நிலையில், இவர்கள் அனைவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. 34 பேருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மரபணு மாற்றும் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் தமிழ்நாட்டிலிருந்தாலும், மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பி உறுதிசெய்த பின்னர்தான் அறிவிக்க வேண்டி உள்ளது. எனவே தற்போது மாநிலத்தில் உள்ள ஆய்வகத்தில் உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இது குறித்து மத்தியக் குழுவிடம் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதிகம் பாதிப்பு இல்லாத நாடுகளிலிருந்து வந்தவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு வந்துள்ள நிலையில், எனவே அந்த நாட்டிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தினால் தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான கோரிக்கையும் மத்தியக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் வருபவர்களுக்கு மட்டும் தொற்று ஏற்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள நிலை குறித்த அனைத்துத் தகவல்களும் மத்தியக் குழுவிடம் கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? - ஸ்டாலின் ஆலோசனை