ETV Bharat / state

முடிவுக்கு வந்த காத்திருப்பு: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 'ஸீரோ டிலே' வார்டு தொடக்கம்! - Zero Delay ward

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் ஸீரோ டிலே வார்டு (Zero Delay ward) இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

author img

By

Published : May 22, 2021, 1:53 PM IST

தமிழ்நாட்டில் இரண்டாவது கரோனா அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளின் முன் கரோனா தொற்று நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் இதே நிலை நீடித்து வந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் ஸீரோ டிலே வார்டு (Zero Delay ward) இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கூடுதலாக 136 படுக்கை வசதிகள் கொண்ட இந்த வார்டை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஏற்கனவே, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக, 1914 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ஆம்புலன்ஸில் வரும் கரோனா நோயாளிகள், படுக்கையில்லாமல் வாகனங்களிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை தவிர்ப்பதற்காக 136 படுக்கைகளுடனான ’கரோனா ஸீரோ டிலே வார்டு’ (Corona zero delay extension ward) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிசீலினை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.