ETV Bharat / state

நீட் விலக்கு மசோதா குறித்து அமித் ஷா தகவல் - மா. சுப்பிரமணியன் வரவேற்பு - சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை தொடக்கம்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, கல்வித் துறை அமைச்சர்களுடன் கலந்துபேசுவதாக அமித் ஷா கூறியிருப்பது நல்ல மாற்றம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா
நீட் விலக்கு மசோதா
author img

By

Published : Jan 19, 2022, 3:22 PM IST

சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் கை-மாற்று அறுவை சிகிச்சை கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஜனவரி 19) திறந்துவைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையிலும் பிற நோய்களுக்கான சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இன்று காலை கோஷா மருத்துவமனையில் ஆய்வுமேற்கொண்டு சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வராததால் கண்காணிப்பாளர், ஆர்எம்ஓ இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

3787 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதி

இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கை-மாற்று அறுவை சிகிச்சை கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. இரு அதிநவீன அறுவை அரங்கம், 20 படுக்கைகள், இரண்டு கோடியே 98 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சுக்கான சிகிச்சை மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனையில் கை-மாற்று அறுவை சிகிச்சை கட்டடம் திறப்பு

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1.21 லட்சம் குக்கிராமங்களில் 24 ஆயிரத்துக்கும் மேலான கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு உள்ளது. நகரங்களில் 1.27 லட்சம் தெருக்களில் 28 ஆயிரத்துக்கும் மேலான தெருக்களில் வசிப்பவர்களுக்குத் தொற்று உறுதியாகிவருகிறது.

சென்னையில் ஒன்பதாயிரத்து 237 தெருக்களில் தொற்றுப் பரவல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 787 இடங்கள் கரோனா காரணமாகத் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 1.92 லட்சம் படுக்கைகளில் ஒன்பதாயிரம் படுக்கைகளே நிரம்பியுள்ளன. தொற்று உறுதியான 94 விழுக்காடு நபர்கள் வீட்டுத் தனிமையிலேயே உள்ளனர்" என்றார்.

நீட் விலக்கு மசோதா குறித்து அமித் ஷா

தொடர்ந்து பேசிய அவர், "பொங்கல் விடுமுறைக்கு பலர் சொந்த ஊர் சென்றதால் கிராமங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும். வரும் நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். இருப்பினும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை, கல்வித் துறை அமைச்சர்களிடம் கலந்துபேசுவதாகக் கூறியிருப்பது நல்ல மாற்றம். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டைப் போலவே தனது ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறியிருக்கிறார். அதனால், அமித் ஷா கேட்கும்போது, மத்திய அமைச்சரும் நல்ல பதிலைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வடசென்னையில் 15 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.