ETV Bharat / state

சென்னையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 94%ஆக அதிகரிப்பு - corona discharge count increased in chennai

சென்னை : கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு 94ஆக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Healing from Corona in Chennai rises to 94% said chennai corporation

author img

By

Published : Oct 27, 2020, 12:26 PM IST

சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடையாறு, அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைந்தவரின் எண்ணிக்கையும் அதற்கு சமமாக உள்ளது.

சென்னையில் நேற்றுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 93 விழுக்காடு நபர்கள் குணமடைந்திருந்த நிலையில், தற்போது 94 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விழுக்காடும் ஐந்தாக குறைந்துள்ளது. இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 378 பேர், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 923 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3599 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மண்டலவாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

கோடம்பாக்கம் - 20,217 பேர்

அண்ணா நகர் - 20,339 பேர்

ராயபுரம் - 16,797 பேர்

தேனாம்பேட்டை - 17,470 பேர்

தண்டையார்பேட்டை - 14,666 பேர்

திரு.வி.க. நகர் - 14,161 பேர்

அடையாறு - 14,462 பேர்

வளசரவாக்கம் - 11,944 பேர்

அம்பத்தூர் - 13,031 பேர்

திருவொற்றியூர் - 5,614 பேர்

மாதவரம் - 6,690 பேர்

ஆலந்தூர் - 7,496 பேர்

சோழிங்கநல்லூர் - 5,126 பேர்

பெருங்குடி - 6,620 பேர்

மணலி - 2,936 பேர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.