ETV Bharat / state

போலீஸுக்கும் நேவிக்கும் டிஸ்யூம்... டிஸ்யூம்! - கடற்படை அதிகாரி

சென்னை: தலைமைக் காவலருக்கும் கடற்படை அலுவலருக்கும் இடையே நடந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

File pic
author img

By

Published : May 8, 2019, 1:53 PM IST

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அசிதேஷ், அவரது நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

அச்சமயம் ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலர் தினேஷ் குமார் சற்று குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. தினேஷ் குமார் அசிதேஷ், அவரது நண்பர்களை வீட்டிற்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அசிதேஷ் புகைபிடித்துக் கொண்டு காவலரை கிண்டலடித்து சிரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் தினேஷ் குமார் அசிதேஷை தாக்கியுள்ளார். பதிலுக்கு அசிதேஷும் தினேஷ் குமாரை தாக்கினார்.

இந்தத் தாக்குதலில் அசிதேஷுக்கு மூக்கிலும், தலைமைக் காவலருக்கு உள் காயமும் ஏற்பட்டு இருவரும் சிகிச்சைக்காக கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர், காவல் துறையினர் அசிதேஷை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அவர் இந்திய கடற்படையில் பணியாற்றுவது தெரியவந்தது.

மேலும் தன்னை தாக்கிய தலைமைக் காவலர், உடனிருந்த சக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அசிதேஷ் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தலைமை காவலருக்கும் கடற்படை அதிகாரிக்கும் இடையே மோதல்.போலிசார் விசாரணை.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காபி ஹவுஸ் கடைக்கு எதிரே நேற்று இரவு உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த  அசிதேஷ்(28) மற்றும் அவரது நண்பர்களுடன் டீ அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது..

அப்போது ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் தினேஷ் குமார் சற்று குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.அப்போது அசிதேசை வீட்டிற்கு கிளம்பி செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அசிதேஷ் சிகரெட் பிடித்து கொண்டும் கிண்டலடித்து சிரித்ததாக தெரிகிறது.இதனால்  தலைமை காவலர் அசிதேஷ் கையை பிடித்து செல்லுமாறு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அசிதேஷ் தாக்கியதாகவும் பதிலுக்கு தலைமை காவலர் தினேஷ் குமாருக்கு இடையே சண்டை ஏற்ப்பட்டது. இந்த தாக்குதலில்  அசிதேஷ் மூக்கில் காயம் ஏற்ப்பட்டதாகவும் தலைமை காவலருக்கு உள் காயம் ஏற்பட்டு கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் அசிதேசை காவல் நிலையம் கொண்டு விசாரித்ததில் இந்திய கடற்படையில் பணியாற்றுவது என்பது தெரியவந்தது.

மேலும் தன்னை தாக்கிய தலைமை காவலர் மற்றும் சக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.