ETV Bharat / state

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: விரைந்து சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - OBC reservation medical seats

Madras high court
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 27, 2020, 11:30 AM IST

Updated : Jul 27, 2020, 1:48 PM IST

11:18 July 27

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி, அதிமுக, திராவிடர் கழகம், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்குகளில் இன்று(ஜூலை 27) தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ-யும் தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சில் வாதம் ஏற்க முடியாது. மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக்கூடாது என எந்த விதிகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும். மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும், ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை.

மேலும், மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் கலந்து ஆலோசித்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். மூன்று மாதங்களில் அதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கைகோர்த்த தமிழ்நாட்டு எம்பிக்கள்!

Last Updated : Jul 27, 2020, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.