ETV Bharat / state

ஒரே மாதிரியான மின்கட்டணம் வசூலிக்கக் கோரிய வழக்கு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு...!

author img

By

Published : Oct 8, 2020, 11:05 AM IST

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ஒரே மாதிரியான மின் கட்டணம் வசூலிக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

திருநெல்வேலியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் இந்து அறநிலையத் துறை மேற்பார்வையில் உள்ள வழிபாட்டுத்தலங்களுக்கு மின் கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்காத வழிபாட்டுத் தலங்களுக்கு வணிக கட்டடங்களுக்கு பெறப்படும் மின் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான இந்து வழிபாட்டுத் தலங்கள் மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் வணிக கட்டடங்களுக்கு வசூலிக்கப்படும் தொகையே மின் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.எனவே ஏற்கனவே உள்ள கட்டண விவரங்களை நீக்கி அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தைவசூலிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு,"வழிபாட்டுத் தலங்களில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது. ஒரே மாதிரியான மின் கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும்" என கருத்துக் தெரிவித்தனர். தொடர்ந்து, இது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...அதிமுக எம்எல்ஏவிடமிருந்து மகளை மீட்டுதரக்கோரி தந்தை ஆட்கொணர்வு மனு: இன்று விசாரணை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.