ETV Bharat / state

மோட்டார் வாகனங்களுக்கு வரி விலக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - மோட்டார் வாகனங்களுக்கு வரி விலக்கு

சரக்கு வாகனங்களுக்கு செப்டம்பர் வரை மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC  notice to state on Motor vehicle tax exemption quash case

author img

By

Published : May 27, 2020, 11:14 PM IST

தமிழ்நாட்டில், சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு, மே 14ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் முருகன் வெங்கடாச்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், "கரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து செப்டம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது. வரி செலுத்துவதற்கு கால நீட்டிப்பு கோரவில்லை எனவும், கால அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வரி விலக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும்" மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, மோட்டார் வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஜூன் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க... பொதுத்தேர்வு நடத்தினால் நீதிமன்றம் செல்வோம் - ஆசிரியர்கள் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.