ETV Bharat / state

2019-ல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்!

கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில்(Impersonation in NEET exam), இக்குற்றத்திற்கு ஏஜெண்டாக செயல்பட்ட இருவருக்கு பல கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 11, 2023, 10:57 PM IST

மதுரை: நீட் தேர்வில் முறைகேடு (Impersonation in NEET exam) செய்த விவகாரத்தில் ஜாமீன் கோரி ரகுவன்ஷ் மணி, சகேட் குமார் சிங் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், "2019ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர், நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏஜென்டாக செயல்பட்டதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டோம்.

இந்த வழக்கில் நாங்கள் இருவரும், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டோம். வழக்கு விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஜன.11) விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "மனுதாரர்கள் இருவருமே மாணவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் தேர்வு எழுத துணை செய்துள்ளனர். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதி, "இருவரும் மதுரையில் தங்கியிருந்து சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தினமும் காலை 10:30 மற்றும் மாலை 05:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டுகளை வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் இல்லையெனில், உரிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் கார்டின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். தலைமறைவாகவோ, சாட்சிகளை கலைக்கவோ கூடாது’’ உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் (conditional bail) வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நீட் முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள் என்ன? - சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.