ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர் மரணம்! மறுஉடற்கூராய்வுக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்க உத்தரவு! - ஆட்டோ ஓட்டுநர் சந்தேக மரணம்

சென்னை: காவல் ஆய்வாளர் தாக்கியதால் மரணமடைந்ததாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநரின் உடலை மறுஉடற்கூராய்வு செய்யும் கோரிக்கை குறித்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

saidapet magistrate court
ஆட்டோ ஓட்டுநர் மரணம் தொடர்பாக மறு உடற்கூராய்வுக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்க உத்தரவு
author img

By

Published : Dec 22, 2020, 9:11 PM IST

சென்னை காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கத்தை கஞ்சா வைத்திருந்த புகாரில், டிசம்பர் 6ஆம் தேதி ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளர் சரவணன் விசாரணைக்கு அழைத்துச்சென்று, கைது செய்துள்ளார். இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாலிங்கத்தை ஆஜார்படுத்தி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது மனைவி பிரபா டிசம்பர் 8ஆம் தேதி சிறையில் சென்று பார்த்தபோது, தனது கணவரின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறிய நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி மகாலிங்கம் மரணமடைந்துவிட்டதாக பிரபாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபா தொடர்ந்துள்ள வழக்கில், கணவர் மகாலிங்கத்தை உரிய விசாரணை செய்யாமல் ஆய்வாளர் சரவணன் அழைத்து சென்று அடித்து சித்திரவதை செய்ததால்தான் இறந்துள்ளதாகவும், ஆனால் சந்தேக மரணம் என்ற பிரிவில் மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கணவரின் உடலுக்கு மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும், சந்தேக மரணம் என பதிவான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும், இடைக்கால இழப்பீடாக ரூ. 50 லட்ச வழங்க உத்தரவிட வேண்டும் என இடைக்கால கோரிக்கைகள் வைத்துள்ளார்.

காவல் ஆய்வாளர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிசம்பர் 10ஆம் தேதி அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கணவர் மரணத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் பிரதான கோரிக்கைகள் முன் வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி டி.ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தாக்கியதால் மரணம் என்ற குற்றச்சாட்டுடன் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுதாரர் பிரபாவின் இந்த இடைக்கால கோரிக்கை தொடர்பாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மற்ற கோரிக்கைகள் தொடர்பான விசாரணைக்காக வழக்கு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காவல் ஆய்வாளர் அடித்து ஆட்டோ ஒட்டுநர் மரணம்! ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.