நாகை மாவட்ட நாகூர் தர்காவை எட்டு பேர் கொண்ட அறங்காவலர்கள் குழு நிர்வகித்துவருகின்றனர். இவர்களது நியமனம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும். இந்நிலையில் எட்டாவது அறங்காவலராக இருந்த வாஞ்சூர் ஹாஜியா இறந்துவிட்ட காரணத்தினால் அவருக்கு பதிலாக காமில் சாஹிப் என்பவர் தன்னை அறங்காவலராக நியமிக்க உரிமை கோரினார்.
ஆனால் அவர் நியமிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கே.என்.பாஷா, அக்பர்அலி ஆகியோர் கொண்ட ஒரு சமரச குழுவை அமைத்து இதில் சமரச முடிவு எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இரு தரப்பிலும் பேசி எட்டாவது அறங்காவலர்களாக சையது கமில் சாஹிப் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இதுவரை நாகூர் தர்காவை ஐஏஎஸ் அதிகாரி தலைமையின் கீழ் நிர்வாகம் நடைபெற்று வந்தது. அதை தற்போது அறங்காவலர்கள் கையில் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள சந்தனக்கூடு திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:
'வேலூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக், குட்கா பறிமுதல்' - மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை