கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதித்து, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.
ஆனால், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மரியாதை செய்ய பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்று கூடினர். கரோனா தொற்று விதிகள் எதையும் பின்பற்றாமல் அமைச்சர் ஜெயகுமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொங்கியப்பன், இது சம்பந்தமாக எழும்பூர் நீதிமன்றத்தை அணுகி, வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: நடிகை குட்டி பத்மினி மீது நில மோசடி புகார்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு!