ETV Bharat / state

வைகோவுடன் புகைப்படம் எடுக்க 100 ரூபாய்! - chennai

சென்னை: வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்பும் மதிமுகவினர்  ரூபாய் 100 நிதி தர வேண்டும் என்று மதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வைகோ
author img

By

Published : Aug 8, 2019, 12:39 PM IST

மதிமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்பும் மதிமுகவினர் குறைந்தபட்ச நிதியாக ரூபாய் 100/- வழங்க வேண்டும். இனி நிர்வாகிகள் யாரும் வைகோவிற்கு சால்வை அணிவிக்கக் கூடாது. அதற்கு பதிலாக கழகத்திற்கு நிதி அளிக்கலாம். மேலும், கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்
என்றும் மதிமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

தலைமைக் கழக அறிவிப்பு

கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் கவனத்திற்கு

கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம்.

கழகப் பொதுச்செயலாளர் அவர்களுடன் முகப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூபாய் 100/- வழங்க வேண்டும். கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.