ETV Bharat / state

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 'அல்வா'! - chennai latest news

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அல்வாவுடன் கூடிய இனிப்பு வழங்குவதற்கான, விலை ஒப்பந்தப் புள்ளிகளை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து போக்குவரத்துக் கழகங்கள் கோரியுள்ளன.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 'அல்வா'!

author img

By

Published : Oct 18, 2021, 7:55 AM IST

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பட்டாசு போன்றவை வழங்கப்படும். இந்தாண்டு வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதற்காகப் போக்குவரத்துத் துறையில் பணிபுரிவோருக்கு அல்வா, மைசூர் பாகு, சோன் பப்டி, அரை கிலோ தரமான இனிப்பு வழங்க உரிய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் அதிருப்தி

விருப்பமுள்ள நிறுவனங்கள் வருகின்ற 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாளர்கள் தனித்தனியாக ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளனர். ஏற்கனவே ஊக்கத் தொகை தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எனப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே இனிப்பு வாங்க ஒப்பந்தம் கோரியுள்ள செயல் தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி தொழிற்சங்க நிர்வாகிகள் பேசுகையில், "அரசு வெகு விரைவாக ஊக்கத் தொகை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதுடன், தரமான இனிப்புகளை வழங்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: 'நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்க' - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.