பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தமிழ்நாடு அரசியலில் அவ்வபோது அதிரடியான கருத்துக்களைக் கூறி வருகிறார். இதனால் பல்வேறு சர்ச்சைக்களிலும் சிக்கி வருகிறார். வில்லங்கமாக பேசி பின்னர் நான் அப்படி பேசவில்லை என்று பலமுறை அந்தர் பல்டியும் அடித்து வருகிறார்.
ஊடகங்களில் காரசாரமாக பேசக்கூடிய அவர், தனது ட்விட்டர் பக்கத்திலும் அனல்பறக்கும் அரசியல் கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இதற்கு பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே சந்தித்து வருகிறார். இந்நிலையில், ட்விட்டரில் ஹெச் ராஜாவிடம், நெட்டிசன் ஒருவர் வம்படியாக ஒரு கேள்வி கேட்டு கடுப்பேற்றியுள்ளார்.
ஹெச். ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் " திரு ஹெச். ராஜா அவர்களே எனக்கு ஒரு தகவல் வேண்டும். அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும். தமிழ்நாட்டில் கேட்கலாமா?" என்று ஒருநபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு 'கேட்கலாம்..' என்று ஹெச். ராஜா பதில் அளித்துள்ளார். இதையடுத்து " ஒன்றும் இல்ல... பானி பூரிய மைதா மாவுல போடணுமா... இல்ல கோதுமை மாவுல போடணுமா?" என கேட்டுள்ளார். மும்மொழி கொள்கை, மீண்டும் மோடி பிரதமர் ஆனது உள்ளிட்ட சமீபத்தில் ட்ரண்டாக இருக்கும் விசயங்களில் ஏதேனும் ஒன்றை கேட்கப் போகிறார் என்று பெரும் ஆவலாக இருந்த ஹெச்.ராஜா, நெட்டிசனின் குறும்பான கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பானிப்புரி கேள்விக்கு இதுவரையில் எந்த பதிலையும் அவர் பதிவிடவில்லை. அந்த பதிலுக்காக அந்த நெட்டிசன் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல... ஹெச். ராஜாவின் கோடான கோடி பாலோயர்ஸ்களும்தான்.