சென்னை: கிண்டியில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜ பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகாரில், "ரபோல் என்ற நிதி நிறுவனத்தினர் 7000 ரூபாய் கட்டினால் மாதம் 1 மூட்டை அரிசி வீதம் 12 மாதங்கள் வழங்குவதாக தெரிவித்து பணம் வாங்கிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 30 ஆயிரம் ரூபாய் முதல் தவணையாகச் செலுத்தினால் 52 வாரங்களுக்கு 2,500 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்து பணம் பெற்றுக்கொண்டனர்.
கடந்த ஐந்து மாத காலமாக பணம் தராததால் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். அதனைத் தொடர்ந்து விசாரித்த பொழுது 10 கோடி ரூபாய்க்கும் மேல் அந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 9 மாத குழந்தை உள்பட வீட்டில் பிணமாகக் கிடந்த 5 பேர் - காரணம் என்ன?