ETV Bharat / state

குடியிருப்போர் நலச்சங்கங்கள் வசூலிக்கும் பராமரிப்பு சந்தாவுக்கும் ஜிஎஸ்டி உண்டா? – ஆணையர் விளக்கம் - GST

சென்னை: குடியிருப்போர் நலச்சங்கம், குடியிருப்போரிடமிருந்து வசூலிக்கும் பராமரிப்புத் தொகை, ஒரு உறுப்பினருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7500-க்கும் கூடுதலாக இருக்குமானால், 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று சென்னை புறநகர் ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித் துறை ஆணையர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

govt quarters
author img

By

Published : Jul 24, 2019, 8:03 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

”குடியிருக்கும் உறுப்பினரின் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கும் கூடுதலாக இருந்தாலும்கூட, குடியிருப்பு நலச்சங்கத்தின் ஒரு நிதியாண்டிற்கான வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக இல்லையென்றால், அந்த நலச்சங்கம் ஜிஎஸ்டி பதிவு செய்யவோ, ஜிஎஸ்டி வரியைச் செலுத்தவோ அவசியமில்லை.

குடியிருப்பு நலச்சங்கம், தமது உறுப்பினரிடமிருந்து வசூலிக்கும் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கும் கூடுதலாகவும், அந்த சங்கத்தின் வருடாந்திர மொத்த வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் கூடுதலாகவும் இருந்தால் மட்டுமே, அந்த நலச்சங்கம் ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும். மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கும் அதிகமாக இருந்து, ஆண்டு வருவாய் ரூ 20 லட்சத்திற்கும் அதிகமாக இல்லையென்றால், குடியிருப்பு நலச்சங்கம் ஜிஎஸ்டி வரி செலுத்தத் தேவையில்லை.

அதேபோல, மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கும் குறைவாக இருந்து, குடியிருப்போர் நலச்சங்கத்தின் ஆண்டு வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் கூடுதலாக இருந்தாலும் ஜிஎஸ்டி வரி செலுத்தத் தேவையில்லை. ஒரு உறுப்பினர் மாதம் ஒன்றுக்கு ரூ.7500-க்கும் அதிகமாக பராமரிப்புத் தொகையை செலுத்தும்போது, மொத்த தொகைக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.9000 என்றால், இதற்கு 18 விழுக்காடு என்ற விகிதத்தில் ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும்.

மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500க்கும் குறைவாக இருந்தாலும் வரி செலுத்தத் தேவையில்லை என்பதால், ரூ.9000 - ரூ.7500 = 1500 என்று கணக்கிட்டு, ரூ.1500க்கு மட்டும் ஜிஎஸ்டியை செலுத்த எண்ணுவது தவறு. ரூ.9000க்கும் ஜிஎஸ்டி வரியை கணக்கிட்டுச் செலுத்த வேண்டும். ஒரே குடியிருப்பு வளாகத்தில், ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களை சொந்தமாக வைத்திருந்தால், பராமரிப்புத் தொகைக்கான வரம்பு (ரூ.7500) தனித்தனியாக ஒவ்வொரு அப்பார்ட்மெண்டுக்கும் பொருந்தும்.

உதாரணமாக, அவர், ஒரு அப்பார்ட்மெண்டுக்கு ரூ.6000 வீதம் இரண்டு வீடுகளுக்கு பராமரிப்புத் தொகையாக ரூ.12,000 செலுத்தினாலும், ஜிஎஸ்டி வரி செலுத்தத் தேவையில்லை. ஜெனரேட்டர், வாட்டர் பம்ப், புல்தரைக்கான சாதனங்கள், தண்ணீர் குழாய், பைப்கள், பிற வீட்டு பராமரிப்பு சாதனங்களுக்காகவும், பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்காகவும், குடியிருப்போர் நலச்சங்கங்கள் “இன்புட் டாக்ஸ் கிரேடிட்- ஐாப்” பெறுவதற்கு தகுதியுள்ளவை, என்று தெரிவித்துள்ளார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 24.07.19

குடியிருப்போர் நலச்சங்கங்கள் வசூலிக்கும் மாதாந்திர பராமரிப்பு சந்தா தொகைக்கு ஜி.எஸ்.டி. உண்டா? – ஆணையர் விளக்கம்

குடியிருப்போர் நலச்சங்கம், குடியிருப்போரிடமிருந்து வசூலிக்கும் பராமரிப்புத் தொகை, ஒரு உறுப்பினருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7500-க்கும் கூடுதலாக இருக்குமானால், 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்று சென்னை புறநகர் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறை ஆணையர் ரவீந்திரநாத் தெளிவுபடுத்தியுள்ளார். குடியிருக்கும் உறுப்பினரின் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கும் கூடுதலாக இருந்தாலும்கூட, குடியிருப்பு நலச்சங்கத்தின், ஒரு நிதியாண்டிற்கான வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக இல்லையென்றால், அந்த நலச்சங்கம் ஜி.எஸ்.டி. பதிவு செய்யவோ, ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்தவோ அவசியமில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு நலச்சங்கம், தமது உறுப்பினரிடமிருந்து வசூலிக்கும் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கும் கூடுதலாகவும், அந்த சங்கத்தின் வருடாந்திர மொத்த வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் கூடுதலாகவும் இருந்தால் மட்டுமே, அந்த நலச்சங்கம் ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்த வேண்டும். மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கு அதிகமாக இருந்து, ஆண்டு வருவாய் ரூ-20 லட்சத்திற்கும் அதிகமாக இல்லையென்றால், குடியிருப்பு நலச்சங்கம் ஜி.எஸ்.டி. வரி செலுத்தத் தேவையில்லை.

அதேபோல, மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கும் குறைவாக இருந்து, குடியிருப்போர் நலச்சங்கத்தின் ஆண்டு வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் கூடுதலாக இருந்தாலும் ஜி.எஸ்.டி வரி செலுத்தத் தேவையில்லை.

ஒரு உறுப்பினர் மாதம் ஒன்றுக்கு ரூ.7500-க்கும் அதிகமாக பராமரிப்புத் தொகையை செலுத்தும் போது, மொத்த தொகைக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.9000 என்றால், இதற்கு 18 விழுக்காடு என்ற விகிதத்தில், ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டும். மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.7500-க்கு வரி செலுத்தத் தேவையில்லை என்பதால், ரூ.9000 - ரூ.7500 = 1500 என்று கணக்கிட்டு, ரூ.1500-க்கு மட்டும் ஜி.எஸ்.டி-யை செலுத்த எண்ணுவது தவறு. ரூ.9000-க்கும் ஜி.எஸ்.டி. வரியை கணக்கிட்டுச் செலுத்த வேண்டும்.

ஒரே குடியிருப்பு வளாகத்தில், ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று குடியிருப்பு அப்பார்ட்மெண்டுகளை சொந்தமாக வைத்திருந்தால், பராமரிப்புத் தொகைக்கான வரம்பு (ரூ.7500) தனித்தனியாக ஒவ்வொரு அப்பார்ட்மெண்டுக்கும் பொருந்தும். உதாரணமாக, அவர், ஒரு அப்பார்ட்மெண்டுக்கு ரூ.6000 வீதம் இரண்டு வீடுகளுக்கு பராமரிப்புத் தொகையாக ரூ.12000 செலுத்தினாலும், ஜி.எஸ்.டி. வரி செலுத்தத் தேவையில்லை.

ஜெனரேட்டர், வாட்டர் பம்ப், புல்தரைக்கான சாதனங்கள், தண்ணீர் குழாய், பைப்கள், பிற வீட்டு பராமரிப்பு சாதனங்களுக்காகவும், பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்காகவும், குடியிருப்போர் நலச்சங்கங்கள் “இன்புட் டாக்ஸ் கிரேடிட்-ஐப்” பெறுவதற்கு தகுதியுள்ளவை.

இந்தத் தகவலை சென்னை புறநகர் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறை ஆணையர் ரவீந்திரநாத், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

tn_che_06_gst_for_tenants_association_script_7204894

********Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.