சென்னை: தமிழ்நாடு அரசின்கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்காகப் போட்டித் தேர்வு, நேர்காணல் தேர்வுகள் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படுகிறது.
குரூப் 1 தேர்விற்கான முதன்மைத் தேர்வு தேதிகள் குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
ஹால் டிக்கெட்
இதற்கான முதன்மை தேர்வு (விரித்துரைக்கும் வகை) மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். மேலும், தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால் டிக்கெட் ) தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு இடம் மாற்றம்
தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச் 19 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு நிர்வாக காரணங்களால் தற்பொழுது சென்னை தேர்வு மையத்தில் மட்டுமே மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மே 21இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகள்: ஜூன் 5இல் முடிவுகள்