ETV Bharat / state

மெரினாவில் காதல் ஜோடியிடம் அத்துமீறல்..ரவுடிகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் காவலர் கலா! - சென்னை அண்ணா சதுக்கம் போலீசார்

சென்னை மெரினாவில் காதல் ஜோடியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை, தைரியமாக எதிர்கொண்டு அவர்களை கைது செய்ய உதவிய பெண் ஆயுதப் படை காவலர் கலாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 4, 2023, 6:05 PM IST

ரவுடிகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் காவலர் கலாவிற்கு பாராட்டுகள்

சென்னை: காதல் ஜோடியிடம் அத்துமீறியதோடு, வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை பெண் ஆயதப்படை காவலர் கலா என்பவரின் உதவியுடன் சென்னை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, இந்த காவலர் கலா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகளை தைரியமாக விரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெரினா கடற்கரையில் குறிப்பாக, பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு எதிராக உள்ள பகுதியில் நேற்று (ஜூன் 4) மாலை பொதுமக்கள் அதிகம் வந்த வண்ணம் இருந்துள்ளனர். அப்போது காதல் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் கடற்கரைக்குள் வந்துள்ளனர். காதல் ஜோடியின் இருசக்கர வாகனத்தை, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் இடித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அத்தோடு, அவர்களை தாக்கி செல்போனையும் பறித்துள்ளனர். இவ்வாறு செல்போனை பறித்துக்கொண்டு தகராறில் ஈடுபட்ட மர்ம நபர்களை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் கலா என்பவர் தனி ஒருவராக தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். காவலர் கலா விசாரிக்க முயன்ற போது, போதையில் இருந்த அந்த இளைஞர்கள் இவ்வாறு தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து விசாரிக்க வந்த காவலர் கலாவையும் தகாத வார்த்தையில் பேசி தாக்கவும் முயற்சித்துள்ளனர். தனியாக நின்று போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற காவலர் கலா அருகில் இருக்கும் அண்ணா சதுக்கம் காவல் நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளார். அதற்குள் இருசக்கர வாகனத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் காவலர் கலாவிடம் சிக்காமல் தப்பித்து சென்றுள்ளனர். போதை ஆசாமிகளின் இருசக்கர வாகனத்தில் பதிவு எண்ணைப் பார்த்து வைத்திருந்த காவலர் கலா, பாதிக்கப்பட்ட காதல் ஜோடியை அண்ணா சதுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை
சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை

காவலர் கலா மற்றும் காதல் ஜோடி கூறியதை அடிப்படையாக வைத்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும் விசாரணை மேற்கொண்டதில் போதையில் தகராறில் ஈடுபட்டு செல்போனை பறித்துச் சென்றவர்கள் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளான வால் டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த உதயகுமார், தமிழரசன், வசந்தகுமார், சோமசுந்தரம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை அண்ணா சதுக்கம் போலீசார் இந்த நான்கு பேரையும் கைது செய்தனர்.

குறிப்பாக, உதயகுமார் பி பிரிவு ரவுடி என்பதும், அவர் மீது கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோன்று, தமிழரசன் மீது ஏழு வழக்குகளும் வசந்தகுமார் என்பவர் மீது ஐந்து வழக்குகளும் விசாரணையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. போதையில் இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் தாறுமாறாக ஓட்டி இவ்வாறு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதை உதயகுமார் வழக்கமாக கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடிகள் காதல் ஜோடியை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும்போது, மாலை வேலையில் நூற்றுக்கணக்கானோர் சுற்றியிருந்தாலும் ரவுடிகளை தனி ஒருவராக, எதிர்த்து போராடிய காவலர் கலாவிற்கு யாரும் உதவ முன்வரவில்லை. இருந்தபோதிலும் அவர் தைரியமாக நின்று தவறு செய்தவர்களை தட்டிக்கேட்டு தனது கடமையை செய்த காவலர் கலாவை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இத்தகைய குற்றங்களைக் கண்டு துணிச்சலுடன் அவற்றை எதிர்கொண்ட ஆயதப்படை காவலர் கலாவை பாரட்டுவதில் நமது ஈடிவி பாரத் பெருமை கொள்கிறது.

இதையும் படிங்க: இந்தூருக்கு இட்லி கடைக்கு வேலைக்கு சென்ற தேனி சிறுவர்கள் மாயம்.. ராஜதானி போலீசார் மீட்டது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.