ETV Bharat / state

"பேனா நினைவுச்சின்ன வழக்கு"- விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கருணாநிதியின் நினைவாக 134 அடி நினைவு பேனாவை நிறுவ நடத்தப்பட்டது பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமே இல்லை என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்ததோடு, அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

"பேனா நினைவுச் சின்ன வழக்கு"- விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

author img

By

Published : Feb 2, 2023, 10:13 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடுத்த மனு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று(பிப்.02) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில், 'பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும். பேனா நினைவுச்சின்னத்திற்காக CRZ விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும். மெரினாவிலும், கொட்டிவாக்கம் - கோவளம் கடற்கரையிலும் அரசியல் தலைவர்கள் யாருக்கும் சமாதி அமைக்கவோ? சிலைகள் வைக்கவோ? நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 31-ம் தேதி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, 'பத்திரிகைகளில் நான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக்கேட்புக் கூட்டமே இல்லை. எல்லா தரப்பினரையும் அழைத்து நடத்தப்பட்டதா?' என கேள்வி எழுப்பினார். மேலும், இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல்மணிகள்; விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.