சென்னை: இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் காலமானர். அவருக்கு வயது 98. சென்னையில் மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி மினா கடந்தாண்டு உயிரிழந்தார். அவருக்கு சவுமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன் மற்றும் நித்தியா சுவாமிநாதன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்திய பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், நாட்டில் விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக மகசூல் உற்பத்தி செய்வதை உறுதி செய்ய உதவும் வகையில் அதிக மகசூல் தரும் நெல் வகைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சென்னையில் வேளாண் தொடர்பான ஆராய்ச்சி மையத்தை தொடங்கியது உள்பட இந்திய பசுமை புரட்சியில் இவரது பங்களிப்பை பாராட்டும் வகையில், 1987 ஆம் ஆண்டு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது. தொடந்து 1971ஆம் ஆண்டு ராமன் மகசேசே விருது, 1986 ஆம் ஆண்டு ஆல்பட் ஐன்ஸ்டின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
எம்.எஸ்.சுவாமிநாதன் உடல், தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொதுக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஒரு லட்டு ஒரு கோடிப்பே! விநாயகர் விசர்ஜனம் வெகு சிறப்பு - ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!