தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதால், ராயபுரம், தண்டையார்பேட்டையில் தற்போது அதன் பரவல் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பரவல் அதிகமாக உள்ளது.
இதுவரையிலும் சென்னை மாநகராட்சியில் மொத்தம் 2 லட்சத்து 533 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 866 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள 7 ஆயிரத்து 5 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 662 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
மண்டலவாரியான பாதிக்கப்பட்டவரின் பட்டியலை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
- கோடம்பாக்கம் - 21,637 பேர்
- அண்ணா நகர் - 21,878 பேர்
- ராயபுரம் - 17,864 பேர்
- தேனாம்பேட்டை - 18,901 பேர்
- தண்டையார்பேட்டை - 15,533 பேர்
- திரு.வி.க. நகர் - 15,496 பேர்
- அடையாறு - 15,621 பேர்
- வளசரவாக்கம் - 12,699 பேர்
- அம்பத்தூர் - 14,028 பேர்
- திருவொற்றியூர் - 5,998 பேர்
- மாதவரம் - 7,134 பேர்
- ஆலந்தூர் - 8,050 பேர்
- சோழிங்கநல்லூர் - 5,394 பேர்
- பெருங்குடி - 7,215 பேர்
- மணலி - 3,161 பேர்