சென்னை: சிஐடிஐஐஎஸ் திட்டத்தின்கீழ் மாநகராட்சி பள்ளிகளுக்கான, பள்ளி தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றம் [SLDT] என்ற புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் முழுமையான மாற்றத்தை அடைவதற்குத் தேவையான தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் நடைபெற உள்ளன.
இதில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 600 உதவி கல்வி அலுவலர்கள் (AEO), தலைமையாசிரியர்கள் (HM), உதவித் தலைமையாசிரியர்கள் (AHM) மற்றும் மூத்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சுய-தனிப்பட்ட தலைமைத்துவத்தை வளர்ப்பது, கற்பித்தல், கற்றல் செயல்முறை, கல்வி தலைமைத்துவத்தை மாற்றுதல், உறவுமுறை தலைமை (உள் மற்றும் வெளி), நிர்வாகத் தலைமை மற்றும் நிறுவன தலைமை (முன்னணி கண்டுபிடிப்புகள்) என்ற கருப்பொருள்களின் கீழ் பட்டறை மற்றும் பயிற்சி அமர்வுகள் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெற உள்ளன.
இதில் முதல் கட்டத்தில் பயிற்சி வகுப்புகளும், இரண்டாம் கட்டத்தில் செயல்முறை கற்பித்தலும் நடத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு