ETV Bharat / state

"அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" - பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு - Massive condemnation of Supreme Court verdict in Ayodhya case

சென்னை: வரும் 21ஆம் தேதி அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகப் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

செய்தியாளர்
author img

By

Published : Nov 14, 2019, 7:14 AM IST

சென்னை நிருபர் சங்கத்தில் பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக 40க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், "பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு நீதி அல்ல, தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பள்ளி கல்லூரிகளில் மதத்தின் பெயரால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளுவரைக் காவிமயம் ஆக்குவதற்குப் பாசிச எதிர்ப்பு அமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது. அதேபோல், காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பாஜக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பாசிச நடவடிக்கையாக இருக்கிறது.

பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு செய்தியாளர் சந்திப்பு

இதைக் கண்டித்து,வரும் 21ஆம் தேதி சென்னையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும். இந்தப் போராட்டத்தில் திராவிட இயக்கங்கள் தமிழ் தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

இந்த கூட்டத்தில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, வன்னியரசு, கொளத்தூர் மணி, தனியரசு, சுப. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க, மழை நீரில் போடப்பட்ட ஐந்தாயிரம் ஆயில் பந்துகள்!

Intro:Body:

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம்: பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை:

பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக 40க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் சென்னை நிருபர் சங்கத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது:
பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு நீதி அல்ல, தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. பள்ளி கல்லூரிகளில் மதத்தின் பெயரால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள், இதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவள்ளுவரை காவிமயம் ஆக்குவதற்கு பாசிச எதிர்ப்பு அமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது, காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்களின் உரிமைகளுக்கு எதிராக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பாஜக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பாசிச நடவடிக்கையாக இருக்கிறது. இதனை கண்டித்து, வரும் 21ம் தேதி சென்னையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும். இந்தப் போராட்டத்தில் திராவிட இயக்கங்கள் தமிழ் தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்பு தானே நாம் இதற்கு எதிராக செயலாற்ற வேண்டும் என நினைத்தால் நாளை நம் அனைவருக்கும் இந்த பேராபத்தை ஏற்படலாம் என்பதை உணரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, வன்னியரசு கொளத்தூர் மணி, தனியரசு, சுப.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.Conclusion:Bite in mojo

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.