ETV Bharat / state

கிரேன் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு - மூதாட்டி உயிரிழப்பு

சென்னையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது கிரேன் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

கிரேன் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

author img

By

Published : Jul 10, 2021, 6:54 AM IST

சென்னை: செங்குன்றம் தீர்த்தக்கரையம்பட்டு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் இயேசு (70). இவரது மனைவி ஏகவல்லி (65). இவர் மின்சார கட்டணம் செலுத்துவதற்காக தீர்த்தக்கரையும்பட்டு சோத்துப்பாக்கம் சாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த கிரேன் எதிர்பாராத விதமாக ஏகவல்லி மீது மோதியது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், தப்பி ஓடிய கிரேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையைக் கடக்க முயன்றபோது நூல் இழையில் உயிர் தப்பிய சிறுவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.