ETV Bharat / state

பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்திட அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர்

author img

By

Published : Dec 9, 2022, 1:36 PM IST

இளைய சமுதாயத்தினரின் கவனத்தை விளையாட்டின் பால் ஈர்க்கும் வண்ணம் பன்னாட்டு அளவிளான போட்டிகளை நடத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்துள்ளார்

பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்திட அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 44ஆவது செயலாண்மைக் குழு கூட்டம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட இடம் தேர்வு, அரசு நிர்வாக அனுமதி, நிதித் தேவை மற்றும் ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகள், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் வீரர் - வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள், உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், ’விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிடவும், தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகள் அனைத்து விளையாட்டுகளிலும் சாதனை படைத்திடவும், இளைய சமுதாயத்தினரின் கவனத்தை விளையாட்டின் பால் ஈர்க்கும் வண்ணம் பன்னாட்டு அளவிளான போட்டிகளை நடத்திட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிற அரசின் திட்டப் பயன்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 44வது செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளை உலகம் வியக்கும் வண்ணம் நடத்தியுள்ள நிலையில், வருகின்ற காலங்களில் பன்னாட்டு அளவிலான போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தேசிய, பன்னாட்டு அளவிலான போட்டிகள் மற்றும் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் மற்றும் வெற்றி பெறுகின்ற தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகளுக்கு உதவித்தொகைகள், ஊக்கத்தொகைகள் உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: $ 100 பில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கு 10% வளர்ச்சி தருவோம் - ஐடி அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.