சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் பாடங்களைக் கற்பிக்கத் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் 17 உறுப்பு கல்லூரிகள் என மொத்தம் 23 தமிழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இளநிலை தமிழ் மற்றும் முதுகலை தமிழ் பாடத்தில் 55 சதவிகித மதிப்பெண்கள் மற்றும் பி.எச்.டி, முடித்தவர்கள் இளநிலை மற்றும் முதுகலை தமிழ் பாடத்துடன் நெட்(NET(, ஸ்லெட்(SLET), செட்(SET) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் தமிழ் ஆசிரியர் பணிக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 25 ஆயிரம் ஊதியத்தில் 23 பேர் நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களின் நகல்களோடு நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து PDF வடிவத்தில் மின்னஞ்சல் மூலமாக டிச.20ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
dirtamildvt@annauniv.edu என்கிற இணையதள முகவரியிலும், நேரடியாக விண்ணப்பங்களை முனைவர் உமா மகேஸ்வரி, பொறியியல் தொழில்நுட்ப தமிழ்வளர்சி மையம், cpde building, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி -6000 25 என்கிற முகவரியில் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 044 22358592/93 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: Railway Employment News: ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்!