இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 50 விழுக்காடு அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 100 விழுக்காடு பணியாளர்கள் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் பணிகள் நடைபெறவில்லை, இதனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் வாரத்திற்கு ஆறு நாள்கள் பணிக்கு வர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் அரசு அலுவலர்கள் 100 விழுக்காடு, சனிக்கிழமை சேர்த்து பணிக்கு வருவதை மாற்றம் செய்து, வாரத்தில் 5 நாள்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கும். வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சதுரகிரி கோயிலுக்குள் அனுமதிக்க சாதி பார்த்த காவலர் : வலுக்கும் கண்டனங்கள்!