ETV Bharat / state

குடியிருப்பை இடித்துவிட்டு வணிக வளாகம்... கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்...! - demolition of peters colony housing board

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் பீட்டர்ஸ் காலனி குடியிருப்பை இடித்துவிட்டு 17 மாடி வணிக வளாகம் கட்டப்போவதாக அரசு சார்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது.

govt-going-to-build-commercial-complex-after-the-demolition-of-apartment

author img

By

Published : Oct 28, 2020, 8:57 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு உள்ளது. அதில் 340 குடியிருப்பு உள்ள நிலையில், அதனை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டப்போவதாக அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் மக்களை 15 கிலோமீட்டர் தாண்டி வியாசர்பாடி போன்ற இடங்களில் மாற்று இடம் கொடுக்கப்போவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டப்போவதாக கடந்த மார்ச் 20 சட்டப்பேரவையில் சொல்லிவிட்டு, தற்போது அரசு சார்பில் வணிக வளாகம் கட்டுவதற்கு டெண்டர் எப்படி விடப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நம்மிடம் பேசிய அவர், "பீட்டர்ஸ் சாலையில் பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு அமைத்துள்ளது. அதில் அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என அனைத்து துறை அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தருவாக கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் இந்த துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினர். ஆனால் அதற்கு பிறகு அங்கு குடியிருப்பை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டுவதற்கு அரசு சார்பில் டெண்டர் விடப்படும் என விளம்பரம் வந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வா

இது எந்த விதத்தில் நியாம்? அங்கு தங்கி இருக்கும் அரசு மருத்துவர், செவிலியர் அனைவரும் அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணி புரிபவர்கள். அவர்களை 13 கிமீ தாண்டி இருக்கும் குடியிருப்பில் தங்க வைப்பது சரியில்ல. கல்வியாண்டு நிலுவையில் இருக்கும்போது எவ்வாறு அவர்களை அங்கு இருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடியும். எனவே டெண்டரை ரத்து செய்யவேண்டும். இதுதொடர்பாக சம்மதப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கும் மற்றும் முதலமைச்சருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த பகுதி மக்கள் உடன் போராட்டம் நடத்துவோம்" என தெரிவித்தார்.

பள்ளிகள் திறந்துவிட்டால் 15-20 கிலோமீட்டர் தினமும் கொண்டுவந்து விடமுடியாது என பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு சங்கத்தில் செயலாளர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இந்தக் குடியிருப்பில் 1972 முதல் வசித்து வருகிறேன். இங்கு அரசு ஊழியர்கள் 70 சதவீதம் பேரும், 20 சதவீதம் தியாகிகள், 10 சதவீதம் பத்திரிகையாளர்கள் உள்ளனர். இந்தக் குடியிருப்பு இடிக்கப்போவதாகவும், அதனால் எங்களை ஏப்ரல் மாதத்துக்குள் காலி செய்யவேண்டும் எனவும் கூறினர். ஆனால் கரோனா வந்ததால் அது நடக்கவில்லை. தற்போது காலி செய்யவேண்டும் என மீண்டும் கூறுகின்றனர். இடித்துவிட்டு புதிய குடியிருப்பைக் கட்டுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் 17 அடுக்கு வணிக வளாகம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு சங்கத்தில் செயலாளர் முத்து செல்வன்

குடியிருப்பில் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் என முன்களப்பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகள் எல்லாம் அருகிலேயே படிக்கின்றனர். அடுத்த மாதம் இல்லது அதற்க்கு அடுத்த மாதத்திற்குள் பள்ளிகள் திறந்துவிடும். திறந்துவிட்டால் 15-20 கிலோமீட்டர் தினமும் கொண்டுவந்து விடமுடியாது. எனவே இந்தக் கல்வி ஆண்டு வரைக்கும் எங்களுக்கு அனுமதி வேண்டும்" என தெரிவித்தார்.

குடியிருப்பை காலி செய்வதற்கு இந்த கல்வி ஆண்டு வரைக்கும் அவகாசம் வேண்டும் என்பதே அனைவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ரூ.5 செலவில் 25 கிமீ பயணம்... கோவை மாணவர்களின் அசத்தும் மின்சார வாகனம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.