ETV Bharat / state

ஆளுநர் உரையில் வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை - திருநாவுக்கரசர்

சென்னை: ஆளுநர் உரையில் தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்ச் சந்திப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்ச் சந்திப்பு
author img

By

Published : Jan 7, 2020, 2:20 PM IST

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் உரையில் தமிழ்நாடு வளர்ச்சித் திட்டங்களுக்கான போதுமான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. படித்து வேலையில்லாமல் உள்ளவர்களுக்கு மத்திய அரசின் பங்கீட்டுடன் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், கிராமப்புறங்களில் குடிநீர் திட்டங்கள், காவிரி உபரிநீரை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் செல்லும்வகையில் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் எதுவும் இல்லை. வரும் நிதிநிலை அறிக்கையிலாவது இதுபோன்ற திட்டங்களைத் செயல்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க...உடனுக்குடன்: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள்

Intro:சென்னை விமானநிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுபினர் திருநாவுகரசர் பேட்டிBody:
சென்னை விமான நிலையத்தில் திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி

சட்டமன்றத்தில் கவர்னர் உரையில் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு போதுமான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை வருத்தம் தரக்கூடியது. அடுத்த தேர்தல் வர போவதால் அடுத்த பட்ஜெட்டில், கவர்னர் உரையில் திட்டங்களை அறிவிக்க முடியாது. கவர்னர் உரையில் மக்களை சந்தோசப்படுத்த சில அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லை. தமிழகத்தில் சுமார் 1 கோடி பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கான திட்டங்கள் எதுவும் கிடையாது. படித்து வேலை இல்லாமல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்க வேண்டும். வேலை கிடைக்கும் வரை மத்திய- மாநில அரசுகள் செய்யலாம்.

கிராமப்புறங்களில் குடிநீர் திட்டங்கள், காவிரி உபரி நீரை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் திட்டம் போன்ற திட்டங்கள் இல்லை. வரும் பட்ஜெட்டிலாவது இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்தில் மக்களின் உணர்வுகளை ஏற்று தமிழகத்தில் நடைமுறை படுத்த மாட்டோம் என்று அரசு அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற முன் வர வேண்டும். முஸ்லீம்கள், ஈழ தமிழர்களுக்கு எதிராக தீர்மானத்திற்கு ஆதரவாக ஒட்டு போட்டதற்கு தமிழக அரசு பரிகாரம் காண கூடிய வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் குண்டர்களை அனுப்பி போராட்டத்தை நசுக்க ரவுடியிசம் ஏவி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன். ஜனநாயக ரீதியாக நடக்கும் போராட்டங்களில் ஈடுப்படுபவர்கள் மீது ஜனநாயக விரோதமான மத்திய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.