சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று(ஜூன் 13) இரவு டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், பிற நிகழ்வுகள் குறித்தும் முக்கியத் தலைவர்களை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இது ஒருபுறம் இருக்க சமீபகாலமாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுகவின் கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் விரைவில் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான சந்திப்பாகக் கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆளுநரின் திடீர் டெல்லி பயணத்தால் முக்கிய நிகழ்வுகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குடியரசுத்தலைவர் தேர்தல்... மம்தா கடிதம்... குழப்பத்தில் எதிர்க்கட்சிகள்!