ETV Bharat / state

"இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது" - ஆளுநர் ஆர்.என்.ரவி! - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு சட்ட தின விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டமானது தீண்டாமையை நீக்குவதுடன், அனைத்து தரப்புக்குமான சமத்துவத்தை கொண்டதாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

சட்ட தின விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 9:18 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் இன்று (நவ 25) இந்திய அரசியலமைப்பு சட்ட தின விழா சென்னை பெருங்குடியில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, "தற்போதைய காலத்தில் எளிய மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது. நம் சமூகம் என்பது ஒரு குடும்பமாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒன்றாக போராடிய சமூகம் நம் சமூகம். ஆங்கிலேயர்களின் ஆட்சியை நிலைநிறுத்த, நம் சமூகத்தில் மதம், சாதி, மாநிலம் மற்றும் மொழி என பல்வேறு வகைகளில் நம்மிடம் வேற்றுமைகளை உருவாக்கினார்கள்.

இவை அனைத்தையும் கடந்து நாம் சுதந்திரத்துக்காக போராடும் போது, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம். ஒரு தனித்துவமான சமூகத்தில் நாம் வேற்றுமையில் ஒற்றுமை என்று இருக்கிறோம். தற்போது மொழிவாரிய மாநிலங்களாக பெரிய அளவில் பிரிந்து வைக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு பிரிந்து இருப்பதால், நம்மிடைய வேற்றுமையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் அதிக அளவில் பரவி வருகின்றன. ஏன், பள்ளிகளில் மாணவர்களின் தாய்மொழியை கற்றுத்தர வேண்டும் என 30 சதவீத மொழி சிறுபான்மையினர் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

அதைவிடுத்து நாம் தனித்துவம் வாய்ந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து, நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். ஒரு நாடு சுதந்திரம் பெற்றப்பின் அந்நாட்டு மக்கள், வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும்.

ஆனால், இங்கு குறிப்பிட்ட சிலர் மட்டுமே வளர்ச்சி பாதையில் செல்கின்றனர். நமது அரசியலமைப்புச் சட்டம் தனித்துவம் வாய்ந்த பல்வேறு குழுக்கள் மூலம் மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே உருவாக்கப்பட்டது. அதனால்தான் இன்றளவும் அது முழுமை பெறாத ஆவணமாகவே உள்ளது" என்று பேசினார்.

முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் முன்னிலையில் சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலமைப்பு தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ். சந்தோஷ் குமார், பதிவாளர் கவுரி ரமேஷ், பேராசிரியர் சீனிவாசன், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.