ETV Bharat / state

மக்கள்தொகையில் கணிசமானோருக்கு மனநல பிரச்சனைகள்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு - உலக மனநல சுகாதார தினம்

World Mental Health Day: மக்கள்தொகையில் கணிசமானோர் மனநல பிரச்சனைகளை கொண்டுள்ளனர் எனவும், இந்த பிரச்சனை மிகவும் பெரியது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Governor RN Ravi said significant number of the population has like mental health problems
மக்கள்தொகையில் கணிசமானோருக்கு மனநல பிரச்சனைகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 10:48 PM IST

சென்னை: உலக மனநல சுகாதார தினத்தையொட்டி சென்னை, ராஜ் பவனில் இன்று நடைபெற்ற ஆளுநரின் எண்ணித்துணிக
பகுதி 11 நிகழ்ச்சி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாஸ்டர் மைண்ட் ஃபவுண்டேஷன் (எம்எம்எஃப்) ஏற்பாடு செய்திருந்தது.

மனநல சுகாதார சேவையில் சிறப்புற்று விளங்கும் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் மக்கள், அமைப்புகள் மற்றும் கலாசார நிகழ்வில் பங்கேற்ற சிறப்புக் குழந்தைகள் மற்றும் மாணவர்களையும் சிறப்பித்தார்.

பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி., “நமது மக்கள்தொகையில் கணிசமானோர் மனநல பிரச்சனைகளை கொண்டுள்ளனர். இந்த பிரச்சனை மிகவும் பெரியது. நம் நாட்டில் ஆண்டுதோறும் பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளிப்படையாக சாதாரண தோற்றமுடைய ஒருவர் தற்கொலை செய்து கொள்வது மனநலம் என்ற பிரிவின் கீழ் வரத் தகுதியற்றது. அசாதாரண அறிவுசார் நடத்தைக்கு வழிவகுக்கும் ‘மன அழுத்தம்’ இயல்பாக தோன்றுவோரிடையே பொதுவானதாக இருக்கிறது.

இன்றும் கூட, மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரிடம் சென்று ஒருவர் ஆலோசனை பெறுவது இந்த சமூகத்தில் பலரால் ஒரு களங்கமாக கருதப்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த வகை சவால்களை எதிர்கொள்வோருக்கு வழங்கப்படும் சிகிச்சை வரம்புகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது மனித மனதை ஒரு பொருளாக, ஒரு ரசாயன எதிர்வினையாகக் கருதும் நமது புரிதலின் அடிப்படையில் உள்ளது.

மேலும், நமது ஐரோப்பிய அறிவுமுறையின் வெளிப்பாடாகவே மனநலம் குறித்த பொதுவான அணுகுமுறை உள்ளது. அதுவே இப்போதும் நடைமுறையில் உள்ளது. ஆனால், ஐரோப்பிய அறிவுமுறையும் இந்திய அறிவு முறையும் அடிப்படையில் மாறுபட்ட அணுகுமுறைகளை கொண்டவை. ஐரோப்பிய அறிவு முறை என்பது, நமது வரையறுக்கப்பட்ட புலன்கள் மற்றும் அறிவுசார் திறன்களின் அடிப்படையில் மனிதர்களை பௌதிக உடலாகக் கருதுகிறது.

ஆனால், இதை கடந்து பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட களங்கள் உள்ளன. அவை சித்தவியல் (பாராசைகாலஜி) அல்லது மெட்டாபிசிக்ஸ் என வகைப்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய அறிவுமுறைக்கு நேர்மாறாக, நமது இந்திய அறிவுமுறையில் ஒரு தனிநபருக்கான அணுகுமுறை முழுமையானது. இது ஒரு தனிநபரை உடலியல், அறிவுசார்பியல் மற்றும் ஆன்மிகம் என மூன்று கூறுகளாகக் கொண்டிருக்கிறது. இவை அநுபூதி என்று நாம் அழைக்கும் நமது வரையறுக்கப்பட்ட புலன்களுக்கு அப்பால் மட்டுமே அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்.

இந்த செயல்பாட்டில் யோகா போன்ற ஆய்வு செய்ய வேண்டிய மற்றும் பரப்பப்பட வேண்டிய பல நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவை ஒரு வழக்கமாக உள்ளன. அதைப் படித்துப் பார்த்தால் உணர்ந்து அந்த சிந்தனையை முன்னெடுக்க முடியும்.

இந்த யோகா கலையை உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பரப்பி உள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020-இல் இந்திய அறிவு முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்று, மனித மனத்தை புரிந்து கொள்ளும் இந்திய வழியைப் பாராட்டுவதும், குறிப்பாக உலகம் பல தளங்களில் மோதல் சூழலில் இருக்கும்போது, இந்த ஞானத்தைப் பரப்புவது அவசியம்.

ஒரு மொழியின் சொல்லகராதியின் செழுமையை அந்த நாகரிகத்தின் பரிணாம நிலையோடு நேரடியாகத் தொடர்புபடுத்தி, நமது பரிணாம நிலையைப் பிரதிபலிக்கும் வகையில், செழுமையான தமிழ்ச் சொல்லகராதி விஷயங்களை வெளிப்படுத்துவதில் எவ்வாறு முன்னோக்கிச் செல்கிறது.

மேற்கத்திய சொற்களஞ்சியம் இன்னும் விஷயங்களைப் பொருத்தமாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகவில்லை. மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இயற்பியல் துறையில் நல்ல சொற்களஞ்சியத்தைக் கொண்டு முன்னேறி இருக்கின்றனர். ஆனால் ஆன்மிகத்தில், அவர்களின் ஆற்றல் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

குறிப்பாக நமது மனங்களின் காலனித்துவ சிந்தனை அகற்றப்படுதல் அவசியம். நமது ஞானம் உள்ளிட்ட நமது பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். இந்த சிந்தனையுடன் நாம் முன்னேறும்போது மனிதகுலத்துக்கு மிகப்பெரிய சேவை செய்பவர்களாக இருப்போம்.

மேலும், மனிதனாகிய நாம் நமது கடமையை சரிவர செய்யாததால் ஒரு நபரின் உரிமை மறுக்கப்படுகிறது. சிறப்பு கவனிப்பு தேவைப்படும் நமது சகோதர, சகோதரிகளுக்கு நமது கடமைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சென்னையின் எம்எம்எஃப் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் லட்சுமி டி.கே எழுதிய “Brhdhi Vidya” and “Unveiling the Secrets of Indian Psychology” என்ற ஆங்கில புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஆர்.எஸ்.இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விளையாட்டுகள், பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த சட்டத் திருத்தமா? ராமதாஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.