ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மாலை டெல்லி பயணம் - பெட்ரோல் குண்டுகள் வீச்சு

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பாஜக பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Governor
Governor
author img

By

Published : Sep 26, 2022, 3:03 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி மற்றும் பாஜக பிரமுகர்களின் அலுவலகங்கள், வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(செப்.26) மாலை டெல்லி செல்கிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இரண்டு நாட்கள் டெல்லியில் தங்கும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளுடன், தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், இதில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பது குறித்தும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் என தெரிகிறது.

இதையும் படிங்க: அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் ஈபிஎஸ் நிதானம் தவறியுள்ளார் - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.