ETV Bharat / state

ஆளுநர் கல்லூரி மாணவர்களிடம் அரசியல் பேசுகிறார்: கடுகடுத்த அமைச்சர் - governor rn ravi

'தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கல்லூரிகளில் கல்வி குறித்து பேசாமல் அரசியல் தான் பேசுகிறார்; அவர் என்ன கருத்து பேசுகிறார் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள்' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

ஆளுநர் கல்லூரி மாணவர்களிடம் அரசியல் பேசுகிறாரா

author img

By

Published : Dec 5, 2022, 5:41 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி செயல்பாடுகள் மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'இந்த ஆண்டு அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலைக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17.88 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் காலியிடங்களே இல்லாத வகையில் பல்வேறு புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் புதிதாக 21 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் பொறியியல் பாடங்களைப் பொறுத்தவரை 2ஆவது செமஸ்டர் மற்றும் 4ஆவது செமஸ்டர் ஆகியவற்றுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அடுத்தாண்டு ஒன்றாம் செமஸ்டர் மற்றும் 3ஆவது செமஸ்டர் பாடத்திட்டங்களும் மாற்றம் செய்யப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு பாடத்திட்டங்களில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 4000 புதிய பேராசிரியர்களுக்கான பணி நியமனங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 1890 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆகையால், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியிடம் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.

கல்லூரி நிகழ்வுகளில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, கல்வி குறித்து பேசாமல் அரசியல் பேசி வருகிறார். அவர் என்ன கருத்து பேசுகிறார் என்று இளைஞர்கள் அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் சென்னை ஐ.ஐ.டி-யில் பேராசிரியர்கள் நியமனம் இடஒதுக்கீட்டு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதை முறையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே வலியுறுத்தி இருக்கிறார்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டு சென்றார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.