ETV Bharat / state

குரங்கு கையில் பூமாலை.. ஆளுநரை கடுமையாக சாடிய முரசொலி - பிரத­மர் மோடி

ஆளுநர் ரவி­யை­யும் அவரது கையிலே சிக்­கியுள்ள ஆளுநர் பதவி­யை­யும் பார்க்­கும்போது நமக்கு குரங்கு கையில் பூமாலை என்­பதுதான் நினை­வுக்கு வருகி­றது என முரசொலி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 1, 2023, 2:12 PM IST

Updated : Jul 1, 2023, 4:01 PM IST

murasoli governor
ஆளுநர் பதவியை குரங்கு கை பூமாலையாக்கி விட்டார் ஆர்.என். ரவி

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவியிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கினார். பின்னர் சில மணி நேரங்களில் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக திரும்பப் பெற்றதாக முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக முரசொலியில் வெளியான செய்திக் கட்டுரையில், “அமெ­ரிக்கா சென்­றிருந்த பிரத­மர் மோடி ‘ஜன­நா­ய­கம் இந்­தியா அமெரிக்­கா­வின் மர­ப­ணுக்­க­ளில் ஊடுருவியது’ என்று பேசி வந்­த­தின் ஈரம்­ கூ­டக் காயவில்லை, அதற்குள் ஜன­நா­ய­கப் படு­கொ­லைக்கு வித்­திட்டுள்­ளார், ஆளுநர் ரவி.

விடுத­லைச் சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் திருமாவளவன் குறிப்­பிட்­டதுபோல மனநிலை சீராக இல்­லா­தவர் செயல்­பாடு போலத்தான் ஆளுநர் ரவி­யின் செயல்­பா­டுகள் தொடர்கின்றன. பாஜகவின் ஆட்சியில் இந்­திய ஜன­நா­ய­கத்­தின் உயிர் உலக நாடுகளால் விமர்சிக்­கப்­ப­டும் அளவு, ஊசலா­டிக் கொண்டிருக்கிறது. ‘உல­கின் மிகப் பெரிய ஜன­நா­யக நாடு’ என்ற பெரு­மையை சுக்கு நூறாக்க அத்தனை நட­வ­டிக்­கை­க­ளிலும் இறங்­கி­ விட்­டது.

அரசியல் சட்­டத்­தின் அரிச்­சுவடி­யைக் கூட அறியாத ஒரு நபர் தமிழ்­நாட்­டின் ஆளுநராக நியமிக்­கப்­பட்டு, அவர் நடத்­தும் ‘கத்துக்குட்டி அரசியல்’ அத்­துமீறிக் கொண்டிருக்­கி­றது. செந்­தில் பாலாஜி மீது அம­லாக்­கத் துறை ஒரு வழக்­கைப் பதிவு செய்து அதன்­ மீது நட­வ­டிக்­கையில் இறங்­கியுள்­ளது.

அவர் மீது வழக்கு இருப்­ப­தா­லும், அவர் கைது செய்­யப்­பட்டுள்­ள­தா­லும் அவரை அமைச்­சர் பதவியிலிருந்து நீக்கு­வதாக ஆளுநர் தன்னிச்­சை­யாக அறி­வித்­துள்­ளார். பெரும்­பான்மை சட்­டமன்ற உறுப்பி­னர்களால் தேர்ந்­தெடுக்­கப்­பட்ட முத­ல­மைச்­ச­ரையோ, முதலமைச்­ச­ரால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட அமைச்­சர்­க­ளையோ பதவி நீக்­கம் செய்யும் அதி­கா­ரத்தை ஆளுநருக்கு எந்த அரசியல் சட்­டப் பிரிவு அளித்­துள்­ளது என்று ரவி விளக்க வேண்­டும்.

ஆளுநர் நினைத்­தால் அமைச்சரை நீக்­க­லாம் என்­றால், அதே நிலைதானே முத­ல­மைச்­சருக்கும். பின் எதற்கு நாட்டில் தேர்­தல், மக்கள் தேர்ந்­தெ­டுக்கும் அவர்­க­ளது பிரதிநிதி­கள்? செந்தில் ­பா­லாஜி குற்­றம் சாட்­டப்­பட்ட­வரே தவிர, அவர் மீது கூறப்­பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்­கப்­ப­ட­வில்லை. ஆளு­நர் ரவியின் கூற்­றுப்­படி, கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர் அமைச்­ச­ராக இருக்­கக் கூடாது என்றால், நாளை ஆளுநருக்கோ, மத்திய அரசுக்கோ பிடிக்­காத யாரும் அமைச்­ச­ராகவோ, முதல­மைச்­ச­ராகவோ இருக்க முடி­யாது.

ஒரு நாலு பேரை பிடித்து, ‘இந்த அமைச்­சர் மீது ஒரு புகார் கொடு’ என்று கூறிவிட்டு, அந்­தப் புகார் மீது வழக்­குப் பதிவு செய்து, வழக்­குக்கு ஒத்­து­ழைப்­புத் தரவில்லை என்று அமலாக்­கத்­ து­றையை கைது செய்ய வைத்து, வேண்­டா­தவர்­கள் பதவி­யைப் பறித்து விட­ வாய்ப்பு உள்ளது.

உண்­மை­யில் பார்க்­கப் போனால், இது அமைச்­சர் செந்தில்­பா­லாஜி மீதோ, திமுக அரசுக்கு எதிராகவோ, கட்­ட­விழ்த்து விடப்­பட்ட நடவடிக்கை அல்ல. தமிழ்­நாடு மக்­கள் மீதும், அவர்­களுக்கு எதிராகவும் யாரோ ஒரு தற்குறியின் அறிவு­ரை­யைக் கேட்டு தொடுத்துள்ள போர்.

அரசியல் சட்ட அறிவு சிறிதும் இல்­லாத ஒரு நபர், தன்னை ஒரு ஐபிஎஸ் என்று கூறிக் கொள்ளும்­போது, உண்­மை­யி­லேயே அந்­தப் பட்­டம் அவர் வாங்­கியது தானா என்ற சந்­தே­கம் வலுப்­ப­திலும் நியாயம் இருக்கிறது. ஒரு ஆளுநரை வைத்து முதல்­வரையோ அமைச்­சர்­க­ளையோ பதவி நீக்­கம் செய்­ய­லாம் என்று அரசியல் சட்­டம் விதி வகுத்­திருக்­குமானால், இந்­நே­ரம் மத்திய அரசுக்­கும் மோடி, அமித்ஷா கூட்­டத்­துக்­கும் பிடிக்­காத மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், பினராயி விஜயன், சித்­த­ரா­மையா போன்ற முதலமைச்சர்களின் ஆட்­சி­யைக் கவிழ்த்து சூறை­யாடியிருக்­காதா, மத்திய பாஜக அரசு.

எப்­போதோ கொடுத்த புகார், அது­வும் வேலை வாங்­கித் தரு­வ­தாக பணம் பெற்ற புகார், அதுவும் செந்தில் பாலாஜி நேரடியாக வாங்கியதாகக் கூறப்­பட்ட புகார் அல்ல. செந்­தில்பாலாஜி பெய­ரைச் சொல்லி வாங்­கி­யதா­கக் கூறப்­பட்ட புகார் வழக்கு என வந்­த­தும் வாங்­கியதா­கக் கூறப்­பட்ட நபரே, அவரே வாங்­கிய­தைத் திரும்­பக் கொடுத்து வழக்கை முடித்துக் கொண்ட விவ­கா­ரம். வாங்கியதாகக் கூறப்­பட்ட நபர் வாங்­கிய­தைத் திரும்­பக் கொடுத்­துவிட்­டால் அது ஊழல் இல்­லையா என்று கேட்டி­டத் தோன்­றும்.

உண்­மைதான் முன்­னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி நிலத்தை சட்­டத்­துக்­குப் புறம்­பாக வாங்கி அத­னைத் திருப்பிக்கொடுத்து விட்­ட­தால் தண்­டனை இல்லை என்று உச்­ச நீதிமன்­றமே தீர்ப்பு வழங்கிய விவகாரங்­கள் உண்டு.

அமைச்­சர் செந்­தில் பாலாஜி விவகா­ரத்­தில் நடந்­த­தா­கக் கூறப்­பட்ட சம்­ப­வமோ ஜெய­ல­லிதா ஆட்­சிக் காலத்­தில நடந்த விவகாரம். ஜெய­ல­லிதா மறைந்து ஆறு ஆண்டு­கா­லம் ஓடி விட்­டது. இந்த நிலையில், செந்­தில் பாலாஜி மீது அவர் அதிமுகவை விட்டு வில­கிய மாதத்­தில் வழக்கு. அதுவும் அவர் நேரடியா­க சம்­பந்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்ட வழக்கு அல்ல. விசா­ரணை நிலை­யில் உள்ள இந்த வழக்கில் கைது என்­றார்­கள்.

இந்த நிலையில், ஆளுநர் ரவி முத­ல­மைச்­சர் ஸ்டாலினுக்கு கடி­தம் எழுதுகிறார். “உட­ன­டியாக அமைச்­சர் செந்­தில் பாலா­ஜியை அமைச்­சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று முத­ல­மைச்­சர் உரிய விளக்­கம் தந்து விட்­டார். குற்­றச்­சாட்டு உள்ள நிலையில் மத்தியிலும், மாநி­லங்­க­ளிலும் பாஜக உள்­பட பல கட்சியி­னர் அமைச்­சர் பதவியில் இருப்­ப­தைச் சுட்டிக்­ காட்டி­னார், உடனே ரவி பதுங்­கி­னார்.

இப்­போது மீண்டும் பாய்ந்து, தனது அறிவிலித்தனத்தை வெளிச்­சம் போட்டுக் காட்டிவிட்டு பின்­ வாங்­கியுள்­ளார்.
தேர்ந்த அரசியல் வல்லுநர்­கள், பத்திரி­கை­யா­ளர்­கள், அரசியல் சட்­டம் படித்த மேதை­கள் அனை­வ­ரும், “ஆளுநர் ரவியின் இந்­தப் போக்கு, அரசியல் சட்­டம் குறித்து அவ­ரது அறி­யா­மை­யைக் காட்டுகிறது” என்று தெளி­வாக விளக்­கம் அளித்­துள்­ளார்­கள்.

‘சுயபுத்தி இல்­லாத பேர்­வ­ழி­களுக்கு சொல் புத்­தியா­வது இருக்க வேண்டும்’ என்­பார்­கள். இரண்டும் இல்­லாத இரண்­டாம் கெட்டான்களை ஆளுநர்­க­ளாக நியமித்து, ஜன­நா­ய­கப் படு­கொ­லை­கள் நடத்­தப்­ப­டு­வதை மற்­றைய ஜன­நா­யக நாடு­கள் கண்­டால் இந்­தியா­வைப் பற்றி என்ன நினைக்கும்? வெளிநா­டு­க­ளில் உல­கின் மிகப்பெரிய ஜன­நா­யக நாடா­கக் கருதப்­படும் இந்­தியா­வின் ஜன­நா­ய­கத்தை ஆளுநர் ரவி போன்­றோர் கேலிக்கூத்­தாக்கிக் கொண்டிருப்­பதை மத்திய அரசு கருத்­தில் கொள்ள வேண்­டும்.

அமெரிக்கா சென்ற பிரத­மர் மோடி­யி­டம் கேட்­கப்­பட்ட இரண்டே கேள்வி­க­ளில் ஒன்று, இந்­திய ஜன­நா­ய­கச் சீரழிவு குறித்­தது. விளக்க­மா­க பதில் அளிக்க இய­லாத பிரத­மர் மோடி, அமெ­ரிக்க அதிபர் கூறிய பதி­லை­யொட்டி ‘ஜன­நா­ய­கம் எங்­கள் மர­ப­ணுவில் உள்­ளது’ என்றார். ஆளுநர் ரவியின் செயல், பிரத­மரின் பதிலை வேரறுக்­க­வில்­லையா? “குரங்கு கையில் பூமாலை” என்­பார்­களே, ஆளுநர் ரவி­யை­யும், அவரது கையிலே சிக்­கியுள்ள ஆளுநர் பதவி­யை­யும் பார்க்­கும்போது நமக்கு அது­தான் நினை­வுக்கு வருகி­றது.

இதையும் படிங்க: சென்னை திருமங்கலம் சிக்னலில் 'ஜெய் ஸ்ரீராம்' வாசகம்.. காவல் துறை பதில் என்ன?

Last Updated : Jul 1, 2023, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.