ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு.. வெள்ள நிவாரணப் பணிக்கு பிறகு சந்திப்பதாக முதலமைச்சர் தரப்பில் தகவல்

Governor RN Ravi called CM MK Stalin: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 2:11 PM IST

Updated : Dec 13, 2023, 4:12 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க காலம் தாழ்த்துவதாக, தமிழ்நாடு ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குth தாக்கல் செய்தது. அதில், "தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய 12 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி பல மாதங்கள் ஆகியும், தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதில், குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்து இருக்கும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றும் விசாரணைக்கான அனுமதி, பல வருடங்களாக சிறையில் இருக்கும் கைதிகளில் முன்கூட்டி விடுதலை செய்வது, தினசரி மனுக்கள், பணி நியமன ஆணைகள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவது போன்று 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை 12 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், பல மாதங்களாக இவை நிலுவையில் உள்ளன. இதனால் தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு அனுப்பிய 181 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், 5 மசோதாக்கள் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று உள்ளதாகவும், 9 மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் மற்றும் 5 மசோதாக்கள் அக்டோபர் 2023ஆம் ஆண்டுதான் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலுவையிலுள்ள மசோதாக்கள் குறித்து முடிவுகள் எடுக்க கால அவகாசம் தேவை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், மக்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் விரிவானது. ஆனால், ஆளுநர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டவர்கள் (Nominee) மட்டுமே, அதைப் புரிந்து ஆளுநர்கள் செயல்பட வேண்டும். ஆளுநர்களுக்கு மசோதாக்களை முடக்கி வைக்கும் அதிகாரம் இல்லை. மேலும், ஆளுநர் மசோதாக்கள் குறித்து முதலமைச்சரை நேரில் அழைத்துப் பேசி பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்வு காண வேண்டும். இதுவே சிறந்த வழி” என்று கூறி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாலும், மத்தியக் குழு ஆய்வில் இருப்பதாலும் புயல் பணிகள் முடிந்த பின்னர் வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாகூர் தர்கா சந்தனக்கூடு; 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு!

Last Updated : Dec 13, 2023, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.