ETV Bharat / state

"ஆளுநர் ஆர்.என்.ரவியே வெளியேறு" - மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முழக்கம்..!

சென்னையில் ஆளுநர் ரவியை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

author img

By

Published : Apr 13, 2023, 7:33 AM IST

Governor Ravi should be sacked Secular Progressive Alliance Party Leaders said in a protest rally held in Chennai
சென்னையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி-யை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டம் நேற்று சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர்மொஹிதின், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ஆளுநர் ரவி, ஆன்லைன் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தற்போது நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டம் வெற்றி விழா கூட்டமாக அமைந்துள்ளது. தளபதியால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்" என கூறினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “ஜனநாயக முறைப்படி இந்த பிரச்சனையை அனுக வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களை ஆர்.என்.ரவி அவமதித்து வருகிறார். நாட்டில் உள்ள 115 கோடி மக்கள் ஆர்.எஸ்.எஸ் சங்க் பரிவாரர் கும்பலை எதிர்த்து போராட தயாராக உள்ளனர். அவர்களை எதிர்த்து போராட உங்களிடம் தோட்டாக்கள் உள்ளதா? உங்களின் பாட்ச்சா எங்கள் தமிழ் மண்ணில் பழிக்காது. ஆளுநரை நாங்கள் எச்சரிக்கிறோம்" என கூறினார்.

இதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “உயிர் உள்ளவரை தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் பாடுபடுவதில் இருந்து வைகோ ஒருபோதும் பின்வாங்க மாட்டான். ஆளுநரின் போக்கு சரியானது அல்ல. ஆளுநர் தன் போக்கை திருத்திக்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து நாங்கள் போராட தயாராக உள்ளோம்" என கூறினார்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி, “இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஆட்சி தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாடு முதல்வர் இந்த விவகாரத்தில் நிதானமாக செயல்பட்டு வருகிறது. மக்களை காப்பாற்றும் பொறுப்பு ஆளுநரின் கையில் உள்ளது. இன்று இங்கு நடத்தப்படும் கூட்டத்தை போன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுக்க பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்" என கூறினார்.

இதில் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, “தமிழ்நாடு மக்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விரோதியாக இருக்கக்கூடியவர் ஆர்.என்.ரவி. மாணவர்களின் வாழ்வோடு ஆர்.என்.ரவி விளையாடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் பணத்தில் ஆளுநர் 11.32 கோடி ரூபாய் தவறாக பயன்படுத்தியுள்ளார். பேரூராட்சியில் வார்டு மெம்பர் தேர்தலில் கூட ஆர்.என்.ரவியால் வெற்றி பெற முடியாது. ஆளுநர் மாளிகை தமிழ்நாட்டு முதல்வரின் இல்லமாக மாற்ற வேண்டும்" என கூறினார்.

இதில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், “ஆளுநர் மரியாதையோடு செயல்படாமல், நம்முடன் சேர்ந்து மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாமல், ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து முதல்வரின் பேச்சை கேட்க்காமல் செயல்படுவாரேயானால் ஆர்.என்.ரவி-ஐ ஒன்றிய அரசு மாற்ற வேண்டும்" என கூறினார்.

இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், “ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டு அதனை ஏற்றுக் கொண்டவர் ஆர்.என்.ரவி. ஆளுநர் பதவிக்கு எவ்வளவு கலங்கத்தை விளைவிக்க முடியுமோ அவ்வளவு கலங்கத்தை அவர் இழைத்து கொண்டு வருகிறார். தமிழ்நாடு மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் ஆளுநரை வெளியனுப்ப நாம் தயாராவோம்" என கூறினார்.

இதில் பேசிய மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், “போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் செயலை ஆளுநர் செய்து வருகிறார். தமிழ்நாட்டை காப்பாற்றும் தீர்மானத்தை பேரவையில் கொண்டு வருவதை அறிந்து ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநர் செய்யும் துரோகத்திற்கு அதிமுக துணைபோகிறது" என கூறினார்.

இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆளுநர் ரவி போன்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தான் பல மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே மொழி, இந்தி மொழி தான் ஆள வேண்டும் பிராந்திய மொழிகள் இருக்க ஆள கூடாது என்று நினைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ்-இன் கைகூலியாக செயல்படும் ஆளுநர் ஆர்.என் ரவி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என கூறினார்.

இதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “இப்போது நடைபெற்று வரும் கூட்டம் ஆளுநரை மட்டுமல்லாது பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கண்டித்து நடைபெறும் கூட்டம். மோடியும், அமித்ஷாவும் கொடுக்கும் தைரியத்தில் தான் ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகிறார். தமிழ்நாட்டில் கண்ணியமாக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். இதனை ஆளுநர் புரிந்துகொண்டு மீதி உள்ள சட்ட முன்வடிவை கையெழுத்திட்டு திருப்பி அனுப்ப வேண்டும்" என கூறினார்.

இதில் பேசிய திமுக துணை பொதுச்செயளாளர் கனிமொழி, “மாநில அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு கொண்டிருக்கும் ஆளுநர்களை தண்டிக்க வேண்டும். இந்த போராட்டம் வலுக்கிறது. இப்போராட்டம் டெல்லியையும் முற்றுகையிடும். கவர்னர் பதவி ஒரு அலங்கார பதவி என்று கேள்வி எழுப்பியவர் அண்ணல் அம்பேத்கர். இதனை ஆளுநர் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.