ETV Bharat / state

தமிழகமா? தமிழ்நாடா? விளக்கம் அளித்த ஆளுநர் - தமிழகம்

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போன்று தமது பேச்சை பொருள் கொள்வது தவறானது என ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 18, 2023, 12:40 PM IST

Updated : Jan 18, 2023, 12:56 PM IST

சென்னை: இதுகுறித்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என தெரிவித்துள்ளார். தமது கண்ணோட்டத்தை "தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்வதாகவும், தமது பேச்சின் அடிப்படை புரியாமல், "ஆளுநர் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை" எனும் வாதங்கள் தமிழ்நாட்டின் விவாதப்பொருளாகி இருக்கிறது என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக சட்டப்பேரவையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை திருத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு திமுக கடிதம் எழுதியது. இந்த கடிதம் தற்போது உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. குடியரசுத் தலைரிடம் திமுக எம்.பி.க்கள் ஜனவரி 12ம் தேதி கடிதம் வழங்கிய நிலையில் 13ம் தேதி ஆளுநர் டெல்லி சென்று திரும்பினார். இந்நிலையில் இன்று (18.01.2023) மீண்டும் ஆளுநர் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 18, 2023, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.