ETV Bharat / state

ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் கொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி புகார் - governor bodyguard letter to DGP about governor convoy vehicle security issue in mayiladuthurai

தமிழ்நாடு ஆளுநரை தடுக்கும் நோக்கில் கொடிகளை வீசியவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பி உள்ளார்.

ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி டிஜிபிக்கு அனுப்பிய புகார்governor bodyguard letter to DGP about governor convoy vehicle security issue in mayiladuthurai
ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி டிஜிபிக்கு அனுப்பிய புகார் governor bodyguard letter to DGP about governor convoy vehicle security issue in mayiladuthurai
author img

By

Published : Apr 20, 2022, 8:58 AM IST

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் அருகே தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சென்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 75 பேர் கையில் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆளுநர் வாகனத்தில் சென்ற பின் கொடிகளை வீசியுள்ளனர். உடனே காவல்துறை அனைவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநர் கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை வீசி எறிந்தனர் என்று தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து போராட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியான விஷ்வேஷ் பி. சாஸ்திரி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்திற்கு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், "தருமபுரம் ஆதினத்தை சந்திக்க மன்னம்பந்தல் பகுதியில் ஆளுநர் காரில் சென்ற போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு கொடியுடன் உள்ளே நுழைந்து தடுக்க முயன்ற போது காவல்துறை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் சென்றவுடன் விரக்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடி மற்றும் கொடி கம்பங்களைத் தூக்கி வீசி உள்ளனர்.

இந்த செயல் தமிழ்நாடு ஆளுநரைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இருந்துள்ளது. அதனால் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 (ஏதாவதொரு சட்டப்பூர்வ அதிகாரத்தை பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் அல்லது தடுக்கும் உள்நோக்கத்துடன் குடியரசு தலைவர் அல்லது ஆளுநரை தாக்குதல்) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் கார் மீது கற்கள் வீசப்பட்டதா? - தமிழ்நாடு காவல்துறை விளக்கம்

For All Latest Updates

TAGGED:

Complaint
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.