ETV Bharat / state

பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு: அரசு எச்சரிக்கை

சென்னை: கரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.

author img

By

Published : Apr 9, 2021, 6:31 PM IST

அரசு எச்சரிக்கை
அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது. இந்நிலையில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். அதனை மீறினால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டை பொறுத்தவரை கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று விழுக்காடு, இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது. தற்போது ஏப்ரல் 2021 இல் சராசரியாக தினமும் 3,900க்கும் அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கரோனா உறுதி செய்யப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், கோவிட் கவனிப்பு மையங்களில் அனுமதிக்கவும் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தகுந்த இடைவெளி ஆகியவைகளை மீண்டும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 16.3.2021 முதல் இதுவரை விதிகளை மீறியதாக 1,36,667 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து 2,88,90,600 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, தமிழ்நாடு மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் பிசிஆர் பரிசோதனையை செய்து வருகிறது. இதுவரை 2.01 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. வீடு வீடாக சென்று கண்காணித்தல், நடமாடும் காய்ச்சல் முகாம்கள் உட்பட தினமும் 3,000 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது தமிழ்நாட்டில் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.41 விழுக்காடு என குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் அரசு, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நாளை (ஏப். 10) முதல் புதிய கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேணே்டும் - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.