சென்னை: சேப்பாக்கம், புதிய அரசு விருந்தினர் இல்லத்தில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் சையத் செஹஷாதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் வக்ஃபு போர்டு உறுப்பினர்கள், சிறுபான்மை அமைப்புகள் சிறுபான்மையின பெண்கள் அமைப்பு, மத குருமார்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இரண்டு நாள் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டிலுள்ள ஜெயின், சீக்கிய மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு போதிய சலுகைகள் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். தமிழ்நாடு அரசு கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமியத்தை தவிர பிற சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை எனவும் இது குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இஸ்லாமிய விதவைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 500 ரூபாயை அதிகப்படுத்தி தரவேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சிறுபான்மையின பெண்கள் விவாகரத்து அதிகரித்து இருப்பதாக தன்னை சந்தித்த சிறுபான்மையினை நல பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் கூறினார்.
பெண்களின் திறனை வளர்க்கவும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கக்கூடிய வழிவகையை அரசு செய்ய வேண்டும் எனவும் சிறுபான்மையின பெண்களுக்கு என ஓர் தனி திறன் வளர்ப்பு மையம் இல்லாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும் அமைச்சருக்கு இணையான பதவியில் உள்ள தனக்கு தமிழக அரசின் தரப்பில் போதிய மரியாதை தரப்படவில்லை எனவும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
வக்ஃபு போர்டு வாரிய சொத்துக்கள் 63 ஆயிரத்து 332 சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும், அவற்றில் ஜிபிஎஸ் வரைபடம் மூலம் 15 ஆயிரத்து 738 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவற்றில் 13 ஆயிரத்து 344 வகுப்பு சொத்துக்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வக்ஃபு போர்டு வாரிய சொத்துக்கள் இருந்தும் அது குறித்த எந்தவித ஆவணங்களும் இல்லை எனவும் இதுகுறித்து வருவாய்த்துறை வகுப்பு போர்டு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு தர வேண்டுமென தெரிவித்தார். மேலும் வக்ஃபு போடு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிலையில் அத்தகைய சொத்துக்களை மீட்க தமிழ்நாடு அரசு உறுதுணையாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும்'