சென்னை: பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றாம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இருந்தபோதும் நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளி உரிமையாளர்கள் சந்தித்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் திறக்க அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் செய்தியாளரிடம், தனியார் பள்ளி முதல்வர், பள்ளிகள் திறக்கப்பட்டு 100 விழுக்காடு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகைதந்து பொதுத்தேர்வுக்கு ஆர்வமாகத் தயாராகிவருவதாகக் கூறினர்.
மேலும் குழந்தைகளின் படிப்பினைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: 2 அகழாய்வுப் பணிகளைத் தொடங்கிவைத்த ஸ்டாலின்!