சென்னை: அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, 'அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்விற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் 2,691 பேர் தகுதிபெற்றனர். அவர்களில் இன்று 1,500 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பில் 461 இடங்களும்,பிடிஎஸ் படிப்பில் 106 இடங்களும் என 567 இடங்கள் உள்ளன.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வுசெய்யும் மாணவர்களுக்கான அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே, அவர்கள் கல்லூரிகளில் எந்தவிதமான கட்டணங்களையும் செலுத்தத்தேவையில்லை. இதுகுறித்து கல்லூரிகளுக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரியில் மாநில, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் மதிப்பெண் சான்றிதழ் கொள்முதலில் 20 கோடிக்கும் மேல் வீண்செலவு