ETV Bharat / state

Kavimani Award for Child Writer: குழந்தை எழுத்தாளருக்கான 'கவிமணி விருது' விண்ணப்பிக்கலாம் - அரசாணை - சென்னை அண்மைச் செய்திகள்

குழந்தை எழுத்தாளர்களுக்கான கவிமணி விருதுக்கு (Kavimani Award for Child Writer) வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கவிமணி விருது
கவிமணி விருது
author img

By

Published : Nov 19, 2021, 6:40 AM IST

குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வகையில், குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது (Kavimani Award for Child Writer) வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

2021 – 2022ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 18 வயதிற்குள்பட்ட மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வுசெய்து ரூ. 25,000 ரொக்கம், கேடயம், சான்றிதழுடன் 'கவிமணி விருது' வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

இளம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு வரவேற்பு

இதனைச் செயல்படுத்தும்வகையில் பொது நூலக இயக்ககம் இளம் படைப்பாளிகளிடமிருந்து தமிழில் கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காகத் தங்களது படைப்புகளைச் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் www.tamilnadupubliclibraries.org என்ற வலைதள முகவரியிலிருந்து சுயவிவரப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பின்னர் அதனை முழுமையாகப் பூர்த்திசெய்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளுடன் பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை – 600 002. என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது dpltnservices@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வே. தினேஷ் குமார் (அலைபேசி எண்: 99414 33630) என்பவரைத் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 18 வயதிற்குள் உள்ள 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வரை இதில் பங்குபெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் படைப்புகளைத் தேர்வுசெய்ய மாநில அளவிலான ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'விஜய் வரிகட்டாமல் ஏமாற்றுகிறார், சூர்யா இரட்டை வேடம் போடுகிறார்'- கொதிக்கும் அர்ஜுன் சம்பத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.