சென்னை: அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பாடப்புத்தகம், பயிற்சி புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் இரண்டு மாதம் மட்டுமே செயல்பட்டன.
மாணவர்களுக்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்ஆப் மூலம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 6 முதல் 9ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் பள்ளிக் கல்வித் துறையால் வழங்கபட்டது. அந்தப் புத்தகங்கள் பெரும்பாலான மாணவர்களுக்கு கொடுக்கப்படாமல் பள்ளியிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில் உள்ளது.
கடந்த கல்வியாண்டிற்கான புத்தகங்களே கொடுக்கப்படாத நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்க புதிய புத்தகங்கள் அனுப்பப்படுகின்றன.
இதையும் படிங்க: அதிக குழந்தை பெற்றவர்களுக்குப் பரிசு: மிசோரத்தில் விநோத சலுகை!