தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு 50 விழுக்காடு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரவேண்டும் என அறிவித்திருந்தது. அதன்படி பள்ளி மாணவர்களும் அரசின் அறிவுறுத்தலின் பேரில் சுழற்சி முறையில் பள்ளிக்குச் செல்கின்றனர்.
மேலும், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் வாயிலாகவும் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக நவம்பர் 1 அம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்காளுக்கு பள்ளிகள் திறக்க ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது பள்ளிகளை திறக்க தமிழாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய பள்ளிகல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளில் புகார் பெட்டி கட்டாயம் - அதிரடி உத்தரவு