ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு!

author img

By

Published : Jun 10, 2020, 8:18 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு
பொதுத்தேர்வு

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, "2019-20ஆம் கல்வி ஆண்டிற்கு ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு(விடுபட்ட பாடங்களுக்கு) பொதுத்தேர்வு நடத்துவதற்கும், 12ஆம் வகுப்பில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கும் திருத்திய கால அட்டவணை ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது நிலவி வரும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதை தள்ளிவைக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளையும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை எழுதாத மாணவர்களுக்கு நடத்தவிருந்த மறுத்தேர்வினையும் ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்திட உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குகள் தொடரப்பட்டு உயர் நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அரசு விரிவாக ஆய்வு செய்து, தற்போது உள்ள நிலையில் கரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று வல்லுநர்கள் நோய்த் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பெற்றோர்களின் கோரிக்கையும் நோய்த்தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு மாணவர்கள் நோய்த் தொற்றில் இருந்து காக்கும் வகையில் அரசு பின்வருமாறு உத்தரவிடுகிறது.

2019-20ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பில் விடுபட்ட பாடங்கள் ஆகியவற்றுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர்.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப் பதிவு அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்களும் வழங்கப்படும்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரை மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதும் மாணவர்களுக்காக நடத்த இருந்த மறுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் சூழ்நிலைக்கேற்ப 12ஆம் வகுப்பிற்கான மறுதேர்வுகான நாள் பின்னர் அறிவிக்கப்படும்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.