கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக 244 கோடியே 20 லட்ச ரூபாயினை ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில், அடையாறு, கூவம் ஆறுகளை பராமரிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது முதல்கட்டமாக நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பேரிடர் மேலாண்மைப் பணிகள் நடைபெற்றுவருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மாமல்லபுரத்தில் ஆய்வு!